×

பொதுமக்கள் வாங்க விரும்பாததால் டிகேஎம்-9 ரக நெல் கொள்முதல் செய்வது கைவிடப்படும்: அரசு உத்தரவு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் டிகேஎம்-9 ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகை நெல்லை அரவை செய்து பெறப்படும் அரிசி சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக இருப்பதால், இந்த அரிசியை பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்கள் வாங்க விரும்புவதில்லை. இந்த ரக நெல் சாகுபடியாகும் பகுதி மக்களும் இந்த அரிசியை விரும்புவதில்லை.  

இந்நிலையில், டிகேஎம்-9 ரக அரிசியை ரேஷனில் பொதுமக்கள் வாங்க விரும்பாத நிலையில் விநியோகிப்பதை தவிர்க்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது. கேஎம்எஸ் 2022-23 பருவத்திலிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக டிகேஎம்-9 ரக நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதை கைவிட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்போது சந்தையில் புழக்கத்தில் இருக்கும் பிற சன்ன ரக நெல் வகைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Purchase of DKM-9 paddy will be abandoned as the public does not want to buy it: Government order
× RELATED கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110...